Friday, July 27, 2012

Sweets @ my desk

யாராயிருக்கும் ? ஏதும் விசேஷம் எதிர் பார்க்கப்பட்டதாக இல்லையே... !

பொதுவாக 'Sweets @ my desk " என்று தலைப்பிட்டு email வந்தால்... ஏதாவதொரு team member  தனக்கு திருமணம் ஆனதையோ, நிச்சயம் ஆனதையோ அல்லது குழந்தை பிரந்ததையோ குறிக்கும்... software company - களில் இது தொன்று தொட்டு ஒரு வழக்கமாகவே உள்ளதுதான்.

உண்மையை சொல்லப்போனால் இது sweets கொண்டு வந்தவருக்கு ஆப்பின் ஆரம்பம். Hey... congrats என்று ஆரம்பித்து... என்ன விசேஷம் என்ன விஷயம் இவைகளெல்லாம் தெளிவாகத் தெரியும் முன்பே அந்தக் கொடூரமான கேள்வி வரும் Treat எப்போ ?

ஆரம்பத்தில் நானும் sweet களெல்லாம் கொண்டு வந்தவன் தான்.போன முறை கல்யாண நாளென்று கொண்டு வந்த sweet box -இன் வினை.. ஐயோ மறக்க முடியாது!.

<FLASH BACK>

Sweet box -ஐ கொண்டு வந்து வழக்கமாக வைக்கும் sundar desk -இல் வைத்துவிட்டு "Please send a mail to all, சுந்தர்" என்றுவிட்டு வெளியே வந்தேன்.சுந்தர் எங்கள் செல்ல manager . Project estimation, effort estimation-இல் சொதப்புவாறே தவிர இது போன்ற விஷயங்களில் கணீர். சரியான முறையில் வாழ்த்தி .. அனைவரையும் வர வேற்று ஒரு email  அனுப்பி விடுவார்.

வெளியே வர... "விடுகதையா இந்த வாழ்க்கை...... விடைதருவார் யாரோ <Instrumental >  "- என் மனைவிக்கென வைத்திருந்த பிரத்யேக ringtone ஒலித்தது. ஒரு பதினைந்து நிமிடத்திற்கு முன்னால்தான் status update கொடுத்திருந்தேன். office கு வந்துட்டேன் slow -வாதான் drive பண்ணினேன். இதோ இப்ப Sweet எல்லோருக்கும் கொடுக்க போறேன் " .அதற்குள் மறுபடி ஏன் கால் செய்கிறாள் எனத் தெரிய வில்லை ! சரி இப்போதைக்கு cut  பண்ணாமல் silent இல் போட்டு விட்டு அப்றோம் பேசலாம் என்று shirt-pocket-இல் வைத்துக் கொண்டேன்.

"Hey Congrats ..."  - ஒரு ஐந்தாறு பேர் chorus பாடினார்கள்.
[எப்பேர்பட்ட issue-alert email  வந்தாலும் கண்டு கொள்ளாத இவர்கள் இந்த  'Sweets @ my desk " email  மட்டும்  high priority-இல் படித்து விடுகிறார்கள்.அதிலும் பெருங் கொடுமை என்ன வென்றால்... காலை வந்த வுடனே email  பார்ப்பது. சுத்து-பட்டி ஜனங்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு cofee-க்கு கிளம்பி விடுவது. அங்கே mail  கூட check  பண்ணாமல் வரும் சிலருக்கு இவர்களின் update கைங்கர்யம் நடக்கும்.]

Congrats... எத்தனாவது anniversary ?- கொஞ்சம் கூட கூசாமல் அலங்காரவள்ளி கீதா இதைக் கேட்டாள்!
[ சென்ற வருடம் இதே கீதா தான் ஒரு பதினைந்தாயிரம் ரூபாய்க்கு வேட்டு வைத்தவள். கிட்டத்தட்ட எல்லோருமே பக்கத்திலிருக்கும் ஒரு தாபாவிற்கு ok சொல்லியிருக்கையில் இவள் மட்டும் marriage treat கண்டிப்பா Marriot தான் என்று எல்லோரையும் சம்மதித்துக் கேட்கவைத்து என்னை சங்கடத்தில் ஆழ்தியவள்.
இப்போது எத்தனாவது anniversary  என்கிறாள்.   "என்ன கொடுமை சரவணன் !!!:

Hey Treat எப்போ? மறுபடியும் கீதாவே தான். 

"அடக் கொடுமையே.... ஆரம்பிசுடாங்களா.. ?" என்று உள்ளுக்குள்ளே அங்கலாய்த்தாலும்  வெளியில் அழகாக முகத்தை வைத்துக் கொண்டு "Sure.... எங்கவேன்னா... எப்பவேன்னா !"

Hmmm goutham... choose a place man!
[கௌதம் - இது திருவாளர் கீதாவிற்கு புதிதாக சிக்கியிருக்கும் அடிமை. freshser  என்பதால் கௌதம் கொஞ்சம் ஊர்சுற்றி hotel resort இவைகளில் கொஞ்சம் knowledge உள்ளவன் (நாட்டுக்கு ரொம்ப அவசியம் !!!) ]

கிட்டத்தட்ட ஒரு பெரிய மாநாடே நடந்தது...

நரேந்திரா மோடி உண்மையிலேயே திறமைசாலியா? எப்போதும் இல்லாதளவிற்கு குடியரசுத் தலைவர் பதவ்க்கு ஏன் இந்த கொலைவெறி விளம்பரம்?
ஈரான் உண்மையில் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறதா?அஹ்மதினெஜாத் ஏன் குழப்புகிறார் ?
ஒபாமா அடுத்த தேர்தலில் ஜெயிக்க தன் சமாதானப் புறா இமேஜயும் விட்டு விட்டு ஈராக் மீது போர் தொடங்குவாரா?

[மேற்க்கூறிய அத்தனை கேள்விகளுக்கும் வாதம் நடந்தால் கூட இத்தனை களேபரம் இருக்குமோ தெரியவில்லை.]

சத்தியமாக நான் எதிர் பார்க்க வில்லை எந்த hotel இல் சாப்பிடப் போவது என்ற கேள்விக்கு இவ்ளளவு பெரிய விவாதமா?

"Hey... you people decide and send a mail to all" சொல்லிவிட்டு என் 3 *3 cell -லை நோக்கி sorry என் cubicle நோக்கி நகர்ந்தேன்.

அன்று இரவு வீட்டுக்கு போன பொது தான் தெரிந்தது நான் mobile ஐ silent இல் போடுவதற்குப் பதில் On செய்து தொலைத்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரமாவது call ஐ கட் பண்ணாமல் கேட்டுக் கொண்டிருந்திருப்பாள் போலத் தெரிகிறது !
அவள் வழக்கம் போல் தன் மகாபாரதத்திற்கு  title போட்டுக் கொண்டிருக்கும் போதே  நான் சத்தம் போட்டேன்...

நான் : office ல இதெல்லாம் பார்த்தாஅசிங்கம்மா....!  கொஞ்சமாவது கௌரவம்  வேணும்னா treat செலவெல்லாம் பார்க்க கூடாது !

அவள் : அதெல்லாம் bachelors பண்றது, கல்யாணம் ஆனப்றோம் என்ன கௌரவம்...? [சரியானா கேள்வி ! கல்யாண ஆனபின் ஆணுக்கேது மரியாதை .. கௌரவம்]

போன மாதம் அவள் தம்பியும் மனைவியும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை KFC க்கு கூட்டிச் சென்று அங்கு நான் bill pay பண்ணாமல் அவள் தம்பியை pay பண்ணினான்
அவள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நிகழ்ந்த அந்த அநீதியை ஞாபகப் படுத்தினாள்....! ஒரு பெரிய துயரச் சம்பவத்தை சன் டிவி-நிர்மலா பெரியசாமி போல் வர்ணித்தாள்.

அது தற்செயலாய் (?!?) நான் wallet எடுக்க late ஆன சம்பவம்.
எப்படித்தான் correct ஆக ஞாபகம் வருதோ இந்தப் பெண்களுக்கு மட்டும் !!.

அன்று நடந்த களேபரங்களுக்கு பின்னால் என் மாமனாரே மந்திரி அனால் கூட Sweets மட்டும் கொண்டு வரக் கூடாது என்று சபதம் எடுத்து விட்டேன்.

</FLASH BACK>

என்னங்க லஞ்ச் போலாமா ? - புதிதாக வந்த team -mate !

இல்ல கொஞ்சம் work இருக்கு late ஆகும்.நீங்க கிளம்புங்க... BTW என்னவிஷயம் சுந்தர் empty -ஆ mail பண்ணிருக்கார். யார் sweets கொண்டு வந்தது... என்ன விசேஷம்?

"oh you dont know ? நம்ம ராஜீவ் onsite ல இருந்து வந்திருக்கார் " சொல்லிக் கொண்டே அவன் தன ட்ராவைத் திறக்க தினுசு தினுசாய் ஒரு ஐந்தாறு chocolate-கள்.பாத்தீங்களா அப்பவே எடுத்து fill பண்ணிட்டேன்.

[அட... ஆமாம்! நான் கூறிய list -இல் ரொம்ப முக்கியமான ஒரு சம்பவம் .. நீங்கள் onsite -இலிருந்து திரும்ப வருவது... முடிந்தவரை பேர் தெரியாத... தடித்த... chocolate -கள்  கொண்டு வருதல் உசிதம்   ]

நான்: ஒ .... ராஜீவ் - Is he back ... ?
[இந்த ராஜீவ் நான் வெகு நாட்களாகப் பார்க்க எங்கும் ஒரு ஆசாமி.கிட்டத்தட்ட எங்கள் circle -இன் director -க்கு சமமானவர். இப்போதைக்கு senior -manager   என்றாலும் role படி Principal -Architect . இவர் அருட் கடாட்சம் பெற்று விட்டால் நினைக்கும் உயரம் செல்ல முடியும். உதாரணத்திற்கு... சென்ற வருடம் rajeev இங்கிருந்த போது எதுக்கும் உதவாத முரடன் என்று பெரும்பாலோரால் எண்ணப்பட்ட சதீஸ், australlia பயணமானது இவரின் கடைப் பார்வை அருளினால் தான். ஒரு task முடித்துவிட்டு ஒரு million -dollar   ப்ராஜெக்ட் acquire பண்ணியதைப்போல் பேசுபவன் சதீஸ். ராஜீவ்க்கு cricket என்றால் மிகவும் இஷ்டம்...இந்த சதீஸ் தறுதலை சதீஸ் கம்பெனி-காக விளையாடும்...
அடிக்கடி inter -corporate   match களில் cup ஜெயிக்க உதவுபவன். ...அவை எல்லாம் tennis ball tournament என்பது உபரித் தகவல்]

hey நீங்க lunch -க்கு கிளம்புங்க ! நான் ராஜீவை meet பண்ணி ஒரு attendance போட்டுட்டு வந்துடறேன்.

[ ஒரு பேச்சுக்கு தான் attendance என்று சொன்னேன். ராஜீவை நான் சந்திப்பது கிட்டத்தட்ட (என் மாமியாரின் வார்த்தைகளில் சொல்வதானால்) "ஏழுமலையான் தரிசனம்" போன்றது .எப்படியாவது இவர் மனதில் இடம் பிடித்தால் போதும் நானும் ஒரு ரெண்டு நாடுகள் சுற்றி வந்திடலாம். கொஞ்சம் காசு பார்க்கலாம்.அனைத்திற்கும் மேலாக அவ்வப்போது facebook -ஐ பார்த்து இவர் உங்க junior தானே, இவள் உங்கள் class - mate தானே என்று என் மனைவி காட்டும் அனைவருமே பின்புலத்தில் பெரிய பெரிய கட்டிடம்... அரண்மனை... airport ... exhibition என்று foriiegn   ட்ரிப் அடித்த profile கள். இவை தற்செயலாய் நிகழ்வனவா? அல்லது அவள் select பண்ணி என்னிடம் காட்டுகிராளா? - கடவுளுக்கே வெளிச்சம் !]
மற்ற காக்கைகள் அவர் cabin -இல் நுழையும் முன் வேகவேகமாக  நான் பறந்து சென்றேன் ... சீ ... நடந்து சென்றேன் ! போகின்ற வழியில் சுந்தர் desk ! அடேயப்பா எத்தனை வண்ணங்கள் எத்தனை ஜாலங்கள் .. எப்படியும் ஒரு ரெண்டு மூணு கிலோ தேரும் .. அழகழகான airport chocolates (வெளிநாடு செல்பவர்கள் பெரும்பாலும் அந்த நாட்டு அய்யங்கார் பேக்கரிகளைத் தேடித் பிடித்து வாங்கி வருவதில்லை.arirport களில் கிடைக்கும் tax -free   item களே என்பது இன்னொரு தகவல். இருந்தாலும் எப்போதுமே அவைகளின் மேல் எனக்கொரு அலாதிப் பிரியம்.ஓடிப் போய் ஒரு ரெண்டை எடுத்து வைத்துக் கொள்ளலாமா?
 வேண்டாம்  ....வேண்டாம்!  முதலில் தரிசனம் அப்புறம் தான் பிரசாதம் !  )

[shirt மேல்பட்டன்,  collar , கைமடிப்பு எல்லாம் Okay ... ஒரு சின்ன செருமல் .. தொண்டை clear ] hai,, rajeev... welcome back   !

ஹாய்... thanks      How are you ..... ?  [ அவருக்கு என் பெயர் சரியாக நினைவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது.]

I think you forgot me.... remmeber that batch job issue last november , நான் தான் offshore ல இருந்து daily calls organize பண்ணினது !
oh yes.... kadhir உங்கள எப்படி மறக்க முடியும்?we almost have lost the customer's trust on us....  எப்படியோ ஒரு 10,15  days ல தப்பிச்சிட்டோம். I mean offshore ல இருந்து காப்பாத்திடிங்க!
[ஆகா first ball  -லிலேயே சிக்ஸர்...... கல்யாணமான புதிது என்று கூட பார்க்காமல் சென்ற வருடம் நவம்பர் (தமிழில் கிட்டத்தட்ட கார்த்திகை !!!) விடிய விடிய என்னை வருத்தெடுத்தார்கள். அப்போது உள்ளுக்குள்ளே சபித்துக்கொண்டு இருந்தாலும்.... அது இப்போது பேர் வாங்கிக் கொடுத்ததனால் நன்றி சொல்லத் தோன்றுகிறது ]

so kadhir  we should have met long back ...  நீங்க almost  நாலு வருஷமா இதே டீம்-ல இருகிங்கள்ல ? அந்த issue solve   ஆனதுக்கபுறம் வேற ஒரு பிரச்சனையை.. so சரியா  appreciate பண்ணி ஒரு   mail கூட பண்ணல!  my bad !!!

its okay rajeev !!!
[ஐயோ சாமி !... எதுக்கு சாமி பெரிய பெரிய வார்த்தஎல்லாம்... நீங்க ஞாபகம் வச்சிருகிங்களேஅதுவே போதும்!!!  ]

ராஜீவ் : and by the way ... Neenga south ஆ ?
நான் : yes rajeev  I am from tirunelveli

ராஜீவ் : திருநெல்வேலி ??? அடடே நான் பாளையங்கோட்டை. எங்க படிச்சதெல்லாம் ?
நான் : college -க்கு நான் மதுரை போயிட்டேன் ஆனா ஸ்கூல் திருநெல்வேலி மஞ்சப்பமுதலியார் higher secondary school !

ராஜீவ் : அடக் கடவுளே நெசமாத்தான் சொல்றியளா ? நானும் அதே ஸ்கூல் தான் !
[இந்த இடத்தில் நான் half -century அடித்தது போல் உணர்ந்தேன்... வெள்ளைக்கார துரையாட்டம் பேசிக்கொண்டிருந்தவர் எங்கள் தங்கத்-தாமிரபரணி தமிழை பேச ஆரம்பித்துவிட்டார் !!!. பலே வெள்ளையத் தேவா ! onsite இந்த வருடம் உறுதி !!!]

நான் : நீங்க எந்த வருடம்  pass-out ?
ராஜீவ் : 1998
நான் : Oh அப்ப நான் 9th  standard ல இருந்திருப்பேன்.
ராஜீவ் : அப்டினா எண்ணத் தெரிஞ்சிருக்கனுமே ?
நான் : ஹ்ம்ம் நீங்க 12 B section ஆ ? அந்த main building கடைசி class room ?

[இதே சுருள் முடி, வெள்ளை உருவம் ... எதற்கு சிரிக்கிறார் என்று தெரியாமல் அடிக்கடி சிரிப்பு... அந்த senior ஆகத்தான் இருக்க வேண்டுமென்பது என் கணிப்ப்பு ]

ராஜீவ்: ஆஅமா ... அடடே எப்படி தெரியும் ?
நான்: உங்கள நான் பாத்திருக்கேன்... இப்ப நீங்க சொன்னப்புறம் யோசிச்சுப் பார்த்தா நல்ல ஞாபகம் வருது !.. நீங்க... அந்த SPL பாலகுமார் கிளாஸ் தானே !!!

[ஆகா கோடீசுவரன் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பதில் சரியாகச் சொன்னது போல் ஒரு பூரிப்பு... அடுத்த வருடம் என் facebook profile -லிலும் வெள்ளைகாரிகள் சிரித்த படி நிற்பர்... ஓபிரமாதம் !!!
ஆனால் பாலகுமார் பேர் சொன்னதுமே அவர் முகத்தில் சிறிய மாற்றம் - ஒரு வேளை இது அதுவாக இருக்குமோ? ஒரு goal போட try பண்ணலாம் ]

நான்: பாலா school pupil leader  ஆகிற வரைக்கும் நல்ல பையனா இருந்தார் அப்றோம் கொஞ்சம் rough ஆ மாரிட்டார்னு சொல்வாங்க !!!
ராஜீவ் : ஆமா அவன் அப்பவே கொஞ்சம் college சேட்டைகல்லாம் பண்ணினான் !

[ஹஹா... இது நான் எதிர் பார்த்தது தான்..... பாலா ஒரு first class hero ,sports பேச்சுப் போட்டி கவிதை டிராமான்னு அவர் கலந்துகாத எந்த விஷயமும் school -இல் இருக்காது. அவரைச் சுற்றி எப்போதும் அவரின் விசிறிகள் அல்லது பொறாமைக்காரகள் மட்டுமே இருப்பர்   - நம்மவர் ரெண்டாம் category -ஐ சேர்ந்தவர் போலத் தெரிகிறது !... anyways இன்று முதல் எனக்கும் பாலகுமாரைப் பிடிக்கப் போவதில்லை - இது உறுதி !!  ]

நான் : yaya நானும் கேள்விப் பட்டிருக்கேன் (எப்போது என்று தான் தெரியவில்லை) ... நான் அந்த second building , 9th kanaga madam class !
ராஜீவ்: kanaga madam class ஆ .. ??
நான்: ஆமா (அவருக்கு சரியாக ஞாபகிமில்லை போலும் ) அதாங்க முட்டை திண்ணி கனகா மேடம் !!!

[எங்கள் பள்ளியில் கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுக்கும் பட்ட பெயர் உண்டு . கோழி சுப்பிரமணி, பட்டை ராஜன், நரைமுடி நாராயணன், கட்டை கனி சார் , complan சுந்தரவல்லி, military செல்வராஜ், ஆனமண்டை பாண்டியன்,நாய் சுந்தரேசன் .... எல்லா பெயருக்கும் பின்னால் ஒரு பெரிய கதை உண்டு, இந்தக் கதைகள் வருடா வருடம் மெருகு ஏறும்.அந்த ஆண்டு அவரவர் வகுப்பில் உள்ள மாணவச் செல்வங்களின் கற்பனை வளத்துக்கேற்பவும்  அந்த ஆசிரியர் நடத்தைக் கேர்ப்பவும் அந்த கதைகளில் சம்பவங்கள் சேர்க்கப் படும் ]

ராஜீவ்: யாரு சொன்னீங்க  முட்டை திண்ணி ?<க்லுகிளுக்...க்லுகிளுக் >

 [சுவையான அந்த topic -இல் அவரைக் கொஞ்சம் கிரந்கடிக்கலாம் என்று என்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்த வேளையில் அவருடைய desk phone அலறியது .. ச்சே!இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொஞ்சம் யோசிக்கலாம்...! நாங்கள் sports period சென்றபின்னே.. கனகா madam எங்கள் lunch box களைத் துலாவி முட்டை தின்றுக் கொண்டிருந்ததை என் class ராகவன் பார்த்த சம்பவம்... அதற்காக ராகவனை வேறொரு காரணம் சொல்லி வகுப்பிற்கு வெளியில் madam நிற்க வைத்தது.. ராகவன் அப்பா வந்து சண்டை போட்டு அசிங்கப் படுத்தியது ... அடடே .. அவருக்கு வந்த call -ஐ பார்த்தால் இப்போது முடியாது போலிருக்கிறதே.. கொஞ்சம் குசலங்கள் பேசி நட்பு பாராட்டலாம் என்றால்... எத்தனை இடைஞ்சல்கள் .. சச்சே !!! ]

ராஜீவ் : so ... <call முடிந்தது !.. கிட்டத் தட்ட எழுந்தே விட்டார் ..என்ன அவசரமோ தெரிய வில்லை ! > நீங்க lunch -க்கு போகலையா?

[அடப் பாவி இவருக்கென்ன short-term memory loss ஆ ?.. எவளவு சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு conversation -ஐ கபக் என்று முடித்து விட்டார் !  ]

நான்: இல்லங்க.... போகணும்...infact நான் அப்பவே கிளம்பிட்டேன் ... just அப்டியே உங்கள பாத்துட்டு போகலாம்னு தான் !.....உங்கள meet பண்ணினப்றோம் தான் தெரியுது நீங்க நம்ம ஊரு .. நம்ம school-நு... Next time meet   பண்றப்ப முட்டை திண்ணி madam கதையெல்லாம் சொல்றேன் !

[கிட்டத்தட்ட 32 பல்லும் காண்பித்தேன்  - என க்கு முன்பே அவர் cabin -ஐ விட்டு வெளியே போய்விடுபவர் போல் திரும்பி நின்றார்]

ராஜீவ்: by the way ...... hmmm....... Kadhir  right  ?? கனகா மேடம் எங்க பெரியம்மா !

[ஹிரோஷிமா ... நாகசாகி... பூச் ... இந்தோனேசியா....  அய்யோ ஆண்டவா ..... !!!!!!!!]

நான்: oh ... ha... ooohh... sorry   அது... அது இந்தப் பசங்க ... யார விட்டு வச்சாங்க ... அது madam அப்பல்லாம்...

[சரி வாயை மூடு என்பது போல்,,, தன காதுப் பக்கம் அழுத்தமாய்ச் சொரிந்தார் ]

நான் : ok.. raajeev ... hmm nice meeting you ..lunch ... meet you !!!

[சரேலென ராஜீவ் கிளம்பி விட்டார் - Tight ஆக  மூடும்போது மறை கழண்டு தண்ணீர் பீச்சியடித்து பொது இடங்களில் நம்மை அசிங்கப்படுத்தும் watertap-ஐ போல அசடு வழி வழி என்று வழிந்தபடி வெளியில் வந்தேன் !!]

******************************
P.S : ராஜீவ் cabin -இல் இருந்து நான் வெளியே வந்த போது மறுபடியும் சுந்தர் desk -இலிருந்த chocolate -கல் கண்ணில் பட்டன.. இப்பவும் நிறையவே இருந்தன .. அனால் எடுக்கத் தான் ஏனோ மனம் வரவில்லை
******************************






Saturday, November 5, 2011

waiting list

[மணி: காலை 9:10 ]
எத்தனை தடவைதான் சொல்றது ? waiting listன்னு...
ம்ம்...??
அது... 32 ன்னு நெனைக்கிறேன்... check பண்ணனும்...
ம்ம்...??
இல்ல அம்மா..!
ம்ம்ம்...??
சரி.. சரி நான் ODCகுள்ள போறேன் அப்றோம் கால் பண்றேன்...

[silent mode-ல் போட்டு token வாங்கிக் கொண்டோம். secured ODC ... அதனால் no mobiles! ]

கதிர் அவன் mobile-ல் கத்தியதை beach-க்கு சென்று கத்தினால் கடலோரம் வழியே கன்னியாகுமரியில் இருக்கும் அவன் அம்மாவுக்கே கேட்டுவிடும் போல இருந்தது....

[கதிருக்கு கன்னியாகுமரி தான் சொந்த ஊர்.ஆமாம்...!அதே B .Tech !அதே software engineer!. தென் தமிழக software மக்களின் முதன்மைச் சரணாலயமாம் சென்னையின் bachelor 's paradise-ஆம் திருவான்மியூர் தான் தற்போதய வசிப்பிடம் அவனுக்கு..]

என்னாச்சு கதிர்....? வீட்ல யாராச்சும் travel பண்றாங்களா ? - இது நான்
அட இல்லைங்க...! - சுற்றும் முற்றும் பார்த்து பின் மௌனமானான் கதிர்.
tadkal booking போட்ருக்கேன்... அது waiting list -ல போய்டுச்சு..

[online booking அதிகரித்ததன் விளைவுகளில் இதுவும் ஒன்று.பயணத்தை தீர்மானிப்பதற்கு முன் booking செய்து விடுகிறார்கள்.பிரயாணத்தன்று படும் அவஸ்தைகளை compare பண்ணினால் cancellation charge ஒரு பொருட்டே அல்ல... முக்கியமாக இந்த சாப்ட்வேர் மக்களுக்கு ! ]

ஏதோ யோசித்தவனாய் மறுபடி ஆரம்பித்தான் ...ஆமா உங்களுக்கு தெரிஞ்ச travels எதாச்சும் இருக்காங்க ?
ம்ம்ம்... இருக்கே! ...யாருக்கு ? எந்த ஊருக்கு ? - இது நான்.
அட எனக்கு தாங்க....! இன்னிக்கி night க்கு... கிசுகிசுத்தான் காதோரம்!
என்னங்க...? week end deployment இருக்குது! திவாகர்-க்கு தெரிஞ்சுதுன்னா செத்துடுவார்! - இது நான்.
அவரா சாவார்? என்ன சாகடிச்சுருவார் ! நீங்க தயவு செஞ்சு யார்ட்டையும் leak பண்ணிடாதிங்க please ...சரி சொல்லுங்க ஏதாவது travels இருக்குதா ? பரபரத்தான் கதிர்.
ம்ம்... இருக்குது... ஆனா...friday வேற.. நான் கேட்டு சொல்றேங்க... ஒரு one hour time கொடுங்க..- இது நான்.

[Access card நீட்டிப்பிடித்து பெருவிரல் பதித்தபின்...கதவோர கருப்பு machine பீப்பியது...]

உள்ளே நுழைந்ததும் பிரதான மூர்த்தியாய் திவாகர்.கதிர் வேறெங்கோ பார்த்துகொண்டு வேகமாக நடந்தான்.
Kadhir...! could you please come here for a minute ? - இது திவாகர்.
கதிர் முகத்தில் இப்போது நவரசமும் வெளிப்பட்டது... எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை!
உள்ள நுழையும் போதே ஆரம்பிச்சுட்டாரு... இன்னிக்கி plan காலிதான்... முணுமுணுத்தபடி... திவாகர் cabin-உள் நுழைந்தான்.

[திவாகர் எங்கள் project manager . software industry -இன் பெரும்பான்மையான manager-களையும் போலதான்.தனக்கு கீழே வேலை பார்க்கும் எல்லாருமே அரைகுறைகள் என்ற எண்ணம் கொண்டவர்.ஒரு பிரச்சனையால் team-க்கு வரும் தாக்கத்தை விட இவரால் வரும் துக்கமே அதிகம் ! .அமெரிக்க Client-மக்கள் எந்நேரம் அழைத்து புகார் கூறினாலும் உடனே அதை சிரமேற்கொண்டு team -இல் உள்ளவர்களின் தூக்கத்தை கெடுப்பது தான் இவரின் பிரதான பணி,இந்த வாரம் ஞாயிறன்று நாங்கள் ஏற்கனவே deploy செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு website-க்கு சில பஞ்சரிங் டிங்கரிங் வேலை பார்க்கவேண்டிய கெடு.நம் கதிர் தான் இந்த வார பஞ்சர் பையன். ]

என்னங்க இந்த ஆள் உண்மையிலேயே புரியாமதான் பேசுறாரா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறாரா?... அஷ்ட கோணலாக முகத்தை திருப்பியபடி seat-இல் வந்தமர்ந்தான் கதிர்.
என்னவாம்? -இது நான்.
அட.. அந்த சிங்கபூர் replication server-ல ஏதோ memory leak-ஆம் அத monitor பண்ணனும், night shift வரணுமாம்... !
யோவ்... monitoring set பண்ணி log file எல்லாம் analyse பண்ணலாம் மறுநாள்ன்னு சொன்னா ..
இல்ல இல்ல night fulla உட்கார்ந்து பாத்துடே இருந்து correct-ஆ raise ஆகுரப்ப profile பண்ணி கண்டுபிடிங்கறார்.என்ன எளவுங்க இது...!
நீங்க ஊருக்கு போகணும்னு சொன்னிங்களா? -இது நான்.
அது சரி... இந்த memory leak problem, urgent priority issue -வாம்...ஏற்கனவே அவருக்கு பேதி ஆகிகிட்டிருக்கு... நான் leave - ன்னு சொன்னா coma -ல போய்டுவார்....
அத விடுங்க... travels எதாச்சும் விசாரிசிங்களா..?

sorry -ங்க இருங்க... இதோ பண்றேன்... number எல்லாம் ஒரு file-ல வச்சிருந்தேன் அதத்தான் தேடிகிட்டு இருக்கேன்.....
காணோம்... .
சரி நான் வெளில பொய் mobile-ல இருந்து கால் பண்ணி பேசறேன்...In the mean time உங்க pnr நம்பர் இருந்தா கொடுங்க அப்டியே status செக் பண்ணிட்டு வந்திடறேன்.

[எப்பவும் sincere சிகாமணியாய் திகழும் கதிர் இன்று என்னமோ தெரியவில்லை மொத்தமாக குழம்பிக் கொண்டிருந்தான்.secured ODC பட்டம் பெற்றதால் google -க்கு கூட எங்காவது வேறு project-டைச் சேர்ந்த நண்பர்களிடம் ஓட வேண்டி உள்ளது.ஒவ்வொரு meeting-கிலும் senior manager சூடமடித்து சத்தியம் செய்கிறார் browsing செய்வதற்கு, print out எடுப்பதற்கு ரெண்டு system ODC-க்கு வெளியில் arrange செய்கிறோம் என்று ... ஒரு வருஷம் ஆகியும் வருவதாய்த் தெரிய வில்லை ....]

[மணி: காலை 10:40 ]

[கதிருக்கும் எனக்கும் அடுத்தடுத்த seat தான் என்றாலும் எங்கள் பக்கத்தில் ரெண்டு பெண்கள் seats . அதில் ஒரு அம்மணி fresher ...! வேலையைத் தவிர எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் manager spy!. Miss.வனஜா . அதனால் கதிர் காதோரம் சென்று தான் நான் பாட வேண்டியிருக்கும் !]

கதிர் விசரிச்சுட்டேன்... ஒன்னும் தேறலிங்க .. sunday ஏதோ முகூர்த்தமாம்... வேற எதாச்சும் ticket cancel ஆச்சுன்னா உடனே கால் பண்றேன்னு ரெண்டு பேர் சொல்லி இருக்காங்க !அப்றோம் PNR status பார்த்தேன் அதே 32 தான்...- சொல்லும்போது எனக்கே பாவமாக தான் இருந்தது...
கதிர் முகம் சுருங்கிப் போயிற்று...
சரி இங்க வாங்க... ஒரு சின்ன help ... தயவு செய்து முடியாதுன்னு சொல்லிடாதிங்க !

[கதிர் கண்டிப்பாக இதை ஆரம்பிப்பானென்று எனக்கு தெரியும்.இந்த வார பஞ்சர் பையன் replacement... கதிர் பல முறை எனக்கு உதவி செய்திருக்கிறான் என்பதாலும் தூங்குவது ... டிவி பார்ப்பது ... தவிர எனக்கும் வேறு வேலை கிடையாது என்பதாலும் இந்த sunday வரலாம் என ஏற்கனவே நான் தீர்மானித் திருந்தேன்.]

சொல்லுங்க கதிர் - இது நான்.

sunday இந்த deployment கொஞ்சம் பாத்துகிறிங்களா? நான் கண்டிப்பா ஊருக்கு போயாகனும்.சொல்லாம போயிட்டு sick leave சொல்லிடறேன்... நீங்க பாத்துக்கோங்களேன்...
ரொம்ப simple தாங்க எல்லாமே டாகுமென்ட் பண்ணியாச்சு ரெண்டு database script ரெண்டு webserver files .... அவ்ளோதான் move பண்ணிட்டு restart பண்ண வேண்டியது தான்.

Okay ... நான் பாத்துகிறேன்.. document -அ share பண்ணுங்க!- இது நான்.

Thank you so much ....!

அதெல்லாம் சரிதான் ஊர்ல அப்படி என்ன அவசரம்..? ஏதும் problem -ஆ ? [என்னிடம் எதையும் கதிர் மறைத்ததில்லை... கிட்ட தட்ட இரண்டு வருடம் ஒரே project -இல் ஒன்றாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல அவன் நல்ல நண்பனும் கூட]

ம்ம்ம்... உங்ககிட்ட சொல்றதுக்கென்ன ...?
[வனஜாவை ஒரு முறை ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு ]
ம்ம்ம்... Coffee ?... Pantry -க்கு போலாமா ? என்று சொல்லி எழுந்தான் !

ஒரு காபி ஒரு டீ...
வ்ரூம்ம...ம்..ம்! வ்ரூம்ம...ம்..ம்! sugar add பண்ணிகோங்க sir ...

[ஒரே machine-இல் ரெண்டுமே.. கலக்க ஒரு plastic குச்சி கப்புக்குள் மெழுகு பூச்சு என்கிறார்கள்...இதெல்லாம் என்னென்ன உண்டுபண்ணுமோ தெரியவில்லை...
காலம் போகிற வேகத்தில் இந்தக் கேள்விகளெல்லாம் Pantry -யில் உள்ளவனிடம் கேட்டால் "coffe குடுத்தா ஆராய்ச்சி பண்ண கூடாது அனுபவிககனும்" என்று சொல்லுவானோ என்னமோ?]

ஹ்ம்ம்.. இந்தாங்க உங்க டீ! இப்ப சொல்லுங்க கதிர்...
அட என்ன விஷயம்னா..? ... உங்கள்ட ஏற்கனவே சொல்லிருகேன்னு நினைக்கிறன்! என்னோட ஜாதகத்துல நெறையா defects போட்டாரு பிரம்மா.. பொண்ணு ஒன்னும் செட் ஆகல!
last week எங்கம்மா call பண்ணினாங்க! 11 பொருத்தம் இருக்குது... அமோகமான ஜாதகம் ஒன்னு வந்திருக்கு... ஊருக்கு வந்து ஒரு தடவை பார்த்துட்டு போன்னாங்க!
வழக்கம் போல ஏதோ கதை சொல்றாங்கன்னு விட்டுட்டேன்... ஆனா என் தங்கை call பண்ணி, அந்த பொண்ணு என்னோட college தான்னும்... என்னோட junior அப்டின்னு சொன்னா!
அப்றோம் photo வேற அனுப்பி வச்சாங்க... அதா பார்த்தப்ப தான் தெரிஞ்சுது அது எனக்கு தெரிஞ்ச பொண்ணு..
In fact நாங்க ரெண்டு பெரும் Inter college competition நடநதப்ப ஒன்னா programs organize பண்ணி இருக்கோம்.
சொல்லவே இல்ல -இது நான்.
Sorry ங்க... எல்லாம் confirm ஆகட்டும் !அப்றோம் சொல்லிக்கலாம்னு இருந்திட்டேன்.- இது கதிர்.
ஆக... இன்னிக்கி உங்க problem, train-னோட waiting list மட்டும் கிடையாது?-இது நான்.
ஆமா என்னோட life-வோடதும் தான் - இது கதிர்.
கலக்குங்க - இது நான்.
எங்க கலக்கிறது? இந்த திவாகரையும் அந்த memory leak issue- வையும் நினைச்சால் எனக்கு தான் கலக்குது !

[மணி: காலை 11 :30 ]

மறுபடியும் எங்கள் சீட்களில்...
Hey guys ... u both forgot the meeting ? - வனஜா

[ஆம் கொஞ்ச நேரம் முன்பு எகிறிய ஒரு குட்டி reminder window -வை அமுக்கி வைத்த ஞாபகம் இப்போது வந்தது.வனஜா Madam தன்னுடைய ஆங்கிலத் திறமைகளை அரங்கேற்ற வாரமொரு முறை கிடைக்கும் சந்தர்ப்பம்... weekly status meeting!.இது Month end என்பதால் senior manager -ம் வருவார்.
ஆளாளுக்கு போட்டி போட்டு புளுகுவர் !]

போர்களத்துக்கு தயாராவதைப்போல் கதிர் தன்இஷ்ட தெய்வங்கள் அனைவரையும் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

[மணி: மதியம் 12 :00 ] Meeting:

கிட்ட தட்ட ஒன்னரை மணி நேரம் என்ன பேசுறோம் எந்த ISSUE பத்தி பேசுகிறோம் என்று தெரியாமலே... senior manager தன் அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்.எங்கெங்கு சிரிக்க வேண்டும்...எப்போது கை தட்ட வேண்டும்... என்பதெல்லாம் திவாகர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்... எங்களுக்கும் உதவியாய் இருந்தது!.

வனஜா மட்டும் அவ்வப்போது "of course ..." , "As you say" , "Why not?", "In no time sir.." என்று தந்தனத்தோம் பாடிக் கொண்டிருந்தாள்..ஒரு கட்டத்தில் திவாகரையே மிஞ்சி விடுவாள் போலிருந்தது!.

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்த Climax வந்தது... Issue status review !!.
ஒரு கொடூரமான vietnamese மொழி திரைப்படத்தை subtitle இல்லாமல் பார்த்த effect.இதில் இன்று கதிர் தான் வில்லன்.

காைலயில் வந்த memory leak issue அதற்குள் சீனியர் மேனேஜர்-க்கு அப்டேட் ஆகியிருந்தது! .போதாகுறைக்கு திவாகர் பழைய ஓட்டை உடைசல்களை எல்லாம் கொஞ்சம் போட்டுக் கொடுக்க... கதிரை வருந்த்தேடுது விட்டார் SM.

மணி இரண்டை நெருங்கிக்கொண்டிருக்க... பசியில் தலையே சுற்றியது... அமெரிக்காவிடம் உதவி வாங்கி பாகிஸ்தான் மீது போர்தொடுக்கப் போவதுபோல் பல போர் யுக்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார் SM.
ஒரு வழியே மீட்டிங் முடிந்து வெளியில் வர மணி 2 ஆனது.

[மணி: மதியம் 2 :40 ]

மதிய உணவு முடிந்து மறுபடியும் எங்கள் சீட்களில்...

காலைல 9:30 மணிக்கு அங்க இருக்கணும்னு அம்மா சொன்னாங்க!....பேசாம... என்னால வர முடிலன்னு phone பண்ணிடட்டுமா? - ஐந்தாறு தடவை அங்கப்ரதட்சணம் செய்தவன் போல் உடைந்துபோய் ஒரு கேள்வி கேட்டான் கதிர்!

அவசரப் படாதிங்க நாம பார்காத issue -வா ? - ஆறுதல் படுத்த முயன்றேன்.
இல்லங்க weekend deployment மட்டும்னா சமாளிக்கலாம் இப்ப இந்த புது பிரச்னை வேற... SM என்னமோ Tsunami வந்த மாதிரி react பண்றார்.

கதிர் பொறுமையா இன்னொரு one hour work பண்ணுங்க அப்றோம் நாம முடிவெடுக்கலாம்.அந்த சிங்கபோரே log folder path எல்லாம் எனக்கு அனுப்புங்க... நானும் பாக்குறேன்... -என்றேன்.

அவசரத்திற்கு அண்டாவுல கை நுழையாது அப்டினுவாங்க...அது உண்மை தான் - எதையோ துளாவிக் கொண்டு பழமொழி சொன்ன கதிரைப் பார்க்க பாவமாய் இருந்தது.

[மணி: மாலை 4 :20 ]

[இப்போதைக்கு திவாகரின் வாயடைக்க, ஒரு வழியே சில காரணங்களைக் கண்டறிந்தோம்... சில month end job-கள் செய்த வேலை தான் அந்த memory issue-விற்கு காரணம் என்று ஒரு கதை தயாரித்தோம் . திரைக்கதை வசனமெல்லாம் போட்டு திவாகருக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.இதில் கொடுமை என்ன வென்றால் இந்த பிரச்னையை விளக்கி ஒரு presentation தயார் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். அவர் பிரச்னை அவருக்கு.... இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வருவதாலும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாலும் இன்னும் கொஞ்சம் ஆட்கள் தேவை என்று Client-டிடம் கெஞ்சுவதற்கு சரியான சந்தர்ப்பம். Presentation prepare பண்ணி அதை review செய்யச்சொல்லி சரிசெய்து முடிக்க எப்படியும் மூன்று மணி நேரம் ஆகி விடும்
]

கதிர்... free-ஆஹ் விடுங்க chart prepare பண்ணிருப்பான்.நாம போய் check பண்ணலாம் வாங்க...Egmore-ல 5:30-ன தாம்பரம் வர்றதுக்கு 6:20 ஆகிடும் நீங்க இன்னும் 30 நிமிஷத்துல கெளம்புற வழிய பாருங்க-என்றேன்.!

சும்மா விளையாடாதிங்க இன்னும் ரெண்டு மாசத்தில appraisal வரது இந்த நேரம் எதாவது சொதபினா அவ்ளோதான்... எனக்கும் இந்த பொண்ணுங்களுக்கும் ராசி இல்லைங்க....அவ்ளோதான் இதுவும் flop நு நெனைச்சுகிறேன்.

கதிர்... problem இல்லாத ஒரு week சொல்லுங்க பாப்போம். இந்த field-ல problem,issue,deadline ... இப்படி எந்த வார்தைகுமே மரியாதை கிடையாது... சாதாரண சந்தர்பத்துல கூட இதெல்லாம் use பண்ணி உண்மையிலே எது problem எது deadline-நு தெரியாமலே போயிட்டது- கிளம்புங்க !!!life-ல priority assign பண்ண தெரிஞ்சுக்குங்க first - என்றேன்.

[சரி நான் மரணத்துக்கு தயார் என்பது போல் தலையை நிமிர்த்தி..] "சரி வாங்க போகலாம்" என்றான் கதிர்!

[மணி: மாலை 4 :40 ]

[ODC-க்கு வெளியில் சென்று தெரிந் travels எல்லாம் call செய்து பார்த்தாகிவிட்டது. ஒன்றும் அகப்பட வில்லை!.Train-il Waiting list confirm ஆகவில்லை என்றால் கண்டிப்பாக koyambedu சென்று எதாவது ஒரு வண்டியில் தொத்த வேண்டியிருக்கும். சத்தியமாக அது ஆகின்ற காரியமில்லை.இந்தக் களேபரத்தில் ஒரு அரை மணி நேரம் வீணானது சரி PNR status check பண்ணலாம்....பக்கத்து ODC,internet வசதி உண்டு.. irctc.co.in - PNR status .. loading ... loading ... எங்கள் பொறுமையை சோதிக்கவென்றே site அநியாயத்திற்கு slow வாக இயங்கியது!]

அய்யோ... அது திவாகர் தானே? கதிர் காட்டிய திசையில் திவாகரே தான்! அவரோடு வனஜாவும்!

ஆளுக்கொரு system-ல் உட்கார்ந்து அவசர அவசரமாய் email செய்துகொண்டிருந்தனர்... திவாகர் யார்யாருக்கோ போன் செய்து கத்திக் கொண்டிருந்தார்.

என்ன ஆயிற்று என்ற ஆர்வம் எங்கள் இருவருக்கும் இருந்தாலும், மாட்டிகொள்ளக்கூடாதென்ற பயம் வேறு!

எங்கள் project-ஐ சேர்ந்த மேலும் ஐந்தாறு பேர் உள்ளே நுழைந்தனர்!எல்லோர் முகத்திலும் ஒரே மகிழ்ச்சித் தாண்டவம்!

மேலும் பொறுக்க முடியாமல் நேரே திவாகரிடம் சென்றேன்.

"...Only on monday afternoon?"திவாகர் யாரிடமோ phone-ல் கதறினார்.

what happened Diwa ?

The same issue man... like last month,some network outage!. We can't do the weekend deployment too!.Anyways we can do nothing till monday!"

அவர் முன் "ஆஆகா" என கூச்சலிட முடியாது ...ஆனாலும் பயங்கர சோகத்தை முகத்தில் வரவைத்துக் கொண்டு "Oh my god...!"- என்றேன்.

சுருட்டிய paper-ஓடு கதிர் அங்கே வந்து சேர்ந்தான்."Kadhir ... I am sorry man... we would have solved the issues over... these things heppens!.. "கடுமையான வருத்தத்தை தெரிவித்த வண்ணம் யாருக்கோ கால் செய்ய கிளம்பினார் திவாகர் !

சுருட்டியிருந்த பேப்பரை விரித்து Waiting List confirm ஆகியிருந்ததை காட்டி கண்ணடித்தான் கதிர் !

Thursday, November 3, 2011

மற்றொரு நாள்; வேறொரு போராட்டம்

இரண்டாவது முறையாக அதே செய்தி Inbox-ல் குதித்திருந்தது. ஒரு அபலையின் அபயக்குரல் தாங்கி வந்த செய்தியை மறுமுறையும் வாசித்தேன்.

இந்த் பாலாஜி பையன் இத்தனை நேரம் எங்கு தூங்கி கொண்டிருக்கிறான். இது போன்ற கஷ்டமான Technical issue என்றால் என்னை தூங்க விடாமல் செய்திருப்பானே, என்ற என்னம் என்னை தொட்டபோது, கடிகாரமும் காலை 11:00 மணியை தொட்டது. நிஜமாகவே அவன் அப்போது தூங்கி கொண்டிருந்தாலும் ஆச்சிரியமில்லை. அவன் வசிக்கும் Onsite வாசத்தின்படி அவன் ஊரில் இப்போது காலை 7:00 மணி மட்டுமே ஆகியிருக்கும். மீண்டும் Inbox-ஐ தட்டி அதே செய்தியை வாசித்தேன்.

அனுப்பியவள் தெரிந்த முகம் தான் என்றாலும், அவள் Help கேட்டிருந்த LoadRunner-ல் அவளுக்கும் நல்ல பரிச்சியம் என்று எனக்கு தெரியும். சரி, என்ன இருந்தாலும் பாலாஜி Onsite-ல் இருந்து பார்த்து கொள்கிற Project தானே.. Lunch-க்கு பிறகு அவனை Ping பன்னலாம் என்று, ஒரு Mail மட்டும் அவனுக்கு தட்டிவிட்டேன்.

"Whats up? Where are we with this? Need any help?"